Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப பிரச்சனையால் நகரின் முக்கிய சிக்னலில் தீக்குளிப்பு!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (12:46 IST)
குடும்ப பிரச்சனையால் நகரின் முக்கிய சிக்னலில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.


மதுரையின் முக்கிய சாலை சந்திப்பதாக இருக்கும் காளவாசல் சிக்னலில் முதியவர் ஒருவர் தன்மீது பெட்ரோலை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டு எரிந்த நிலையில் சாலையில் ஓடியவரை அங்கிருந்த போக்குவரத்து காவல் பணியில் இருந்த காவலர் அனிதா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அக்கம்பக்கத்தினர் சாதுரியமாக செயல்பட்டு அவர் மீது பற்றி இருந்த தீயை அனைத்து பின் முதியவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

மேலும் தீக்குளிக்க முயற்சி செய்த நபர் திடீர் நகர் பகுதியை சேர்ந்த அழகப்பன் (வயது 65)எனவும், குடும்ப தகராறு காரணமாக கடந்த பத்து நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், இந்தநிலையில் இன்று மாலை மனவிரக்தியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சம்பவம் குறித்து பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் அந்த நபர் சாலையில் திடீரென பெட்ரோலை தலையில் ஊற்றி தனக்குத்தானே தீ பற்ற வைத்துக்கொண்டு சாலையை நடந்து சென்றுள்ளார் பின்னர் அருகாமையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு அவர் மீது இருந்த தீயை அணைத்து உதவியுள்ளார் தொடர்ந்து அழகப்பன் தற்போது 70% தீக்காயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் மேலும் துரிதமாக செயல்பட்ட பெண் காவலர் அனிதாவுக்கும் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

 Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments