Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடன் தொல்லை : விஷம் அருந்திய தாய், குழந்தைகள் மரணம்

Advertiesment
கடன் தொல்லை : விஷம் அருந்திய தாய், குழந்தைகள் மரணம்
, புதன், 28 மார்ச் 2018 (13:14 IST)
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மன்னார்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்து வருபவர் தமிழரசி(30). இவரது கணவர் ஆலமுத்து. இவர்களுக்கு சியாம்(11) என்ற மகனும், மனிஷா(9) என்ற மகளும் உள்ளனர். வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற ஆலமுத்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அவரது குடும்பமே வறுமையில் வாடியது.
 
இதனையடுத்து தமிழரசி ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார். தமிழரசி கிடைத்த வருமானத்தை கொண்டு குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற தமிழரசி குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு அவரும் விஷம் குடித்து விட்டார்.  
 
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் மூவரும் இன்று காலை மரணமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?