Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவிகள் அசத்திய ஓவியம்.

சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவிகள் அசத்திய ஓவியம்.
, சனி, 26 மார்ச் 2022 (22:45 IST)
கொடைக்கானலில் உலக  சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவிகள் அசத்திய ஓவியம்.
 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி 6-வது தெருவில் உள்ளது தனியார் பள்ளியான ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம் நான்காம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டது இதனடிப்படையில் பள்ளி மாணவ மாணவியர்கள் அவரவர்களுக்கு தெரிந்த குருவிகள் மற்றும் அதன் குறித்த விரிவான  கவிதை கட்டுரைகளை எழுதினர்.

இதில் கொடைக்கானல் உகார்த்தே நகரை சேர்ந்த சகோதரிகள் சுபகீதா-பனிரெண்டாம் வகுப்பு, சஜிதா-பத்தாம் வகுப்பு இருவரும் சேர்ந்து உலகக் சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு அழகுமிகு ஓவியத்தை வரைந்தவர் பள்ளியின் மூத்த முதல்வர் ராஜகோபால் மற்றும் முதல்வர் சீனிவாசன்  ஆசிரியர்கள் பாலு ஆசிரியை அருள்மேரி ஆகியோர்கள் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து செய்தார்கள் இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அவரவர் திறமைக்கு ஏற்ப சிறப்பான படங்களை வரைந்து சிட்டுக்குருவி மற்றும் குருவிகள் குறித்து குருவிகளின் பயன்கள் குறித்தும் சிறப்பாக கவிதைகள் கட்டுரைகள் மற்றும் ஓவியங்களை வரைந்து வந்தனர்.

தற்போது உள்ள இயற்கை சூழலில் உயர் மின் கோபுரங்கள் கைபேசி கோபுரங்கள் இதன் கதிர்வீச்சின் காரணமாக சிட்டுக்குருவி  உன்னி குருவி மரங்கொத்தி உள்ளிட்ட பல்வேறு குருவிகள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு குருவி இனங்கள் அழிந்து வருகின்றது கொடைக்கானல் ஸ்ரீ சங்கரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தற்போது உலகக் சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு இதற்காக ஒரு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளின் ஓவியங்கள்  கட்டுரைகள் கவிதைகளால் தற்போது புத்துணர்ச்சி பெறும் வகையில் இத்தகைய பணிகளை செய்து வருவதை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி தேவஸ்தானஸ்தான பேருந்தில் தீ விபத்து