Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதையில் எஸ்.ஐ.-யிடம் தகராறு செய்த போலி வக்கீல்கள் கைது

Advertiesment
போதையில் எஸ்.ஐ.-யிடம் தகராறு செய்த போலி வக்கீல்கள் கைது
, திங்கள், 25 ஜூலை 2016 (19:35 IST)
பிரபல நட்சத்திர ஓட்டல் முன்பு போதையில் தகராறு செய்த போலி வக்கீல்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் முன்பு 5 பேர் கொண்ட கும்பல் போதையில், ஓட்டல் காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டது.
 
அப்போது, அவ்வழியாக வந்த தேனாம்பேட்டை காவல் நிலைய காவல்துறை துணை ஆய்வாளர் கொளஞ்சியம் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறியுள்ளார்.
 
அப்போது அவர்கள், தாங்கள் அனைவரும் வழக்கறிஞர்கள் என்று கூறி அவரிடம் தகராறு செய்துள்ளனர். அதற்கு துணை ஆய்வாளர், ’யாராக இருந்தாலும் பரவாயில்லை. பொது இடத்தில் ரகளையில் ஈடுபடக்கூடாது’ கூறினார்.
 
வாக்குவாதத்தில் அந்த கும்பல் காவல்துறை துணை ஆய்வாகர் கொளஞ்சியத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து தேனாம்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த கும்பலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
 
அப்போது அவர்களில் யாரும் வக்கீல் இல்லை என்பதும், இருவர் கல்லூரி மாணவர்கள், மற்றொருவர் தனியார் நிறுவன ஊழியர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன்னை விமர்சிப்பவன் யோக்கியனில்லை : இயக்குனர் ரஞ்சித் பற்றி எழுதிய ருத்ரன்