Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலி டாக்டர் மருத்துவமனைக்கு சீல்....மாவட்ட இணை இயக்குனர் நடவடிக்கை

போலி டாக்டர் மருத்துவமனைக்கு சீல்....மாவட்ட இணை இயக்குனர் நடவடிக்கை
, புதன், 18 மே 2022 (23:04 IST)
பேரணாம்பட்டில் போலி டாக்டர் மருத்துவமனைக்கு சீல் வைப்பு மாவட்ட இணை இயக்குனர் நடவடிக்கை வேலூர்மாவட்டம்,பேர்ணாம்பட்டு திருவிக நகர் பகுதியில் தனியார் பிசியோதெரபி மருத்துவமனை நடத்தி வருபவர் போலி டாக்டர் சிவகுமார் அவர் மருத்துவமனைக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி பேரணாம்பட்டு திருவிக நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் காது மற்றும் கன்னம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்றார்.
 
அப்போது போலி டாக்டர் சிவகுமார் அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய தாக கூறப்படுகிறது பின்னர் மேல்சிகிச்சைக்காக ரவி என்பவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இறந்துவிட்டார். பின்னர் இதுகுறித்து ரவி என்பவர் மகன் அருண்குமார் பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர் மீண்டும் அதே போல் வசிக்கும் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலி டாக்டர் சிவக்குமாரிடம் மருத்துவம் பார்க்க சென்றபோது அவருக்கு காலில் இரண்டு ஊசிகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது பின்பு மேல் சிகிச்சைக்கு சென்றபோது மோகனா என்ற அவரது கால் அகற்றப்பட்டு தற்போது கவனமாக இருக்கிறார் எனவே மோகனா என்பவரும் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் போலி டாக்டர்கள் கைது செய்யுமாறு புகார் அளித்ததின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இரண்டு பேர் அளித்த புகாரின் பேரில் வேலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கண்ணகி ஆய்வு மேற்கொண்டபோது போலி டாக்டர் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது பின்னர் சிகிச்சை பெற்ற நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி இன்று மாலை 3 மணி அளவில் மாவட்ட இணை இயக்குனர் கண்ணகிபேர்ணாம்பட்டு மருத்துவ அலுவலர் திரு ஞானம் பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன் பேர்ணம்பட்டு போலீசார், விஏஓ கோபி, உட்பட அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதால் பிசியோதரபி மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதி மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்