Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஈவிகேஎஸ். இளங்கோவன்

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (14:26 IST)
ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ  ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமகன் ஈவேரா மறைவையொட்டி, அத்தொகுதிக்கு பிப்ர்வரி 27 ஆம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமமாக  இவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு   மார்ச் 20 ஆம் தேதி கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, மருத்துமனை  நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘’லேசான கொரொனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

பின்னர், கொரொனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்த இளங்கோவன், மீண்டும் நெஞ்சு வலி காரணமாக  தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்  ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்..! ஜி.கே வாசன் நம்பிக்கை..!!

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி..! பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு..!!

உடல்நலம் பாதித்த பெண் யானை..! 4-வது நாளாக தொடரும் சிகிச்சை..!!

காவல் துறை குறித்து அவதூறு வீடியோ.! பெண் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.!

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments