Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராணி போல் செயல்படும் தமிழிசைக்கு நாவடக்கம் தேவை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மகாராணி போல் செயல்படும் தமிழிசைக்கு நாவடக்கம் தேவை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
, திங்கள், 30 அக்டோபர் 2017 (10:34 IST)
தமிழகத்தில் பிரதமர் பெயரை தெரியாத அமைச்சர்கள் இருப்பது வேதனைக்குரியது என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று அளித்த பேட்டியில் காட்டமாக கூறியுள்ளார்



 
 
நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டம் ஒன்றில் பேசுகையில் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை துணை முதல்வர் டெங்கு காய்ச்சலை ஒழிப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறினார். பிரதமர் மோடி பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறி வரும் அமைச்சருக்கு நேற்றே கடும் கண்டனங்கள் எழுந்தன.
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரதமர் பெயரை கூட தெரியாத அளவிற்கு தமிழக அரசில் அமைச்சர்கள் உள்ளதாக காட்டமாக கூறினார்.
 
மேலும் திருநாவுக்கரசர் செயல்பாடு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முடங்கி போய் உள்ளதாக தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மகாராணி போல் செயல்படுவதாகவும், அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறிய அவர், கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி வீட்டிலேயே நடக்கும் விக்ரம் மகள் திருமணம்...