Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் வீரத்தை கவுசல்யாவிடம் காட்ட வேண்டாம் - திமுகவிற்கு எவிடென்ஸ் கதிர் வேண்டுகோள்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:18 IST)
உங்கள் வீரத்தை கவுசல்யாவிடம் காட்ட வேண்டாம். மதவாதிகளிடமும் சாதியவாதிகளிடமும் காட்டுங்கள் என்று எவிடென்ஸ் கதிர் பதிவிட்டுள்ளார்.

 
இயல்பாகவே திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து எனக்குள் ஒரு கேள்வி வரும். ஒரு ஆணவப் படுகொலையை ஆணவப் படுகொலை என்று சொல்லக் கூட துணியவில்லை. வேறு சில சாதியப் படுகொலைகள், வன்முறைகளில் திமுக என்ன நிலை எடுத்தது என மூத்த தோழர்களிடம் கேட்டால் பதில் ஏமாற்றமாகவே இருந்தது என்று அண்மையில் கவுசல்யா திமுகவை விமர்சித்து பேசினார்.
 
இதை அவர் முகநூல் பக்கத்திலும் பதிவிட்டார். இதற்கு திமுக தொண்டர்கள் கவுசல்யாவை இழிவுபடுத்தி ஆபாசமான கருத்துகளை பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து எவிடென்ஸ் கதிர் பதிவிட்டுள்ளார். அதில்,
 
ஆணவப் படுகொலைகளை கண்டித்து திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குரல் கொடுக்கவில்லை என்று கவுசல்யா விமர்சித்து இருக்கிறார். இது கவுசல்யாவின் விம்ர்சனம். பலரும் இது கவுசல்யா பேசவில்லை, எவிடென்ஸ் கதிர் எழுதி கொடுக்கிறார் என்று சொல்கிறார்கள். கவுசல்யாவை கடுமையாக இழிவுபடுத்தி ஆபாசமாகவும் பதிவு செய்கின்றனர். 
 
திமுக மீது நம்பிக்கை இருப்பதனால்தான் இந்த விமர்சனத்தை வைத்து இருக்கிறார். அது தவறு என்கிற பட்சத்தில் நீங்கள் உரிமையுடன் தவறினை சுட்டி காட்டுங்கள். அதை கவுசல்யா புரிந்து கொள்வார். ஆனால். ஆபாசமாக பேசுவது இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது.
 
உங்கள் வீரத்தை கவுசல்யாவிடம் காட்ட வேண்டாம். மதவாதிகளிடமும், சாதியவாதிகளிடமும் காட்டுங்கள். கவுசல்யாவை இழிவுபடுத்தும் தங்கள் கட்சியினரை ஸ்டாலின் அவர்களும் கனிமொழி அவர்களும் கண்டிக்க மறந்தது நியாயம் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments