Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவிற்கு வந்த ஓபிஎஸ் - எடப்பாடி மோதல் ; இரு அணிகளும் இணைகிறது?

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:02 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருப்பது தெரியவந்துள்ளது.


 

 
சில நாட்களுக்கு முன்பு அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சசிகலா நியமித்தது சட்ட விரோதம் என எடப்பாடி அணி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், நேற்று செய்தியாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் மற்றும் ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என இரு அறிவிப்புகளை அறிவித்தார். 
 
எனவே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏறக்குறையை எடப்பாடி அணி நிறைவேற்றிவிட்டதால், எந்த நேரமும் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றால் போல், இதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். 
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சிறிது நேரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கே இருவரும் இணைவதாக அறிவித்துவிட்டு, அங்கிருந்து அதிமுக தலைமை செயலகம் செல்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் அணி தரப்பில் உள்ள கோரிக்கைகள் குறித்தும், யார் யாருக்கு என்னென்ன பதவிகள் அளிக்கப்படும் என்பது குறித்தும் விரிவாக அங்கு விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. 
 
எனவே, இரு அணிகளும் இணைவது பற்றிய முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments