Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார் - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (09:45 IST)
டிடிவி தினகரன் விரைவில் சிறைக்கு செல்வார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.


 

 
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகர்ன் “ இன்னும் ஒரு வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பி.எஸ்-ஸையும் வீட்டிற்கு அனுப்பி விடுவோம்” எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி “ எடப்பாடி தொகுதியில் 9 முறை போட்டியிட்ட எனக்கு ஒரு முறை கூட பிரச்சாரம் செய்ய தினகரன் வந்ததில்லை. ஒரு நாளில் கட்சியில் சேர்ந்து துணை பொதுச்செயலாளர் பதவியை பெற்றவர் அவர். தற்போது ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுகவுடன் கூட்டு சேர்ந்து நாடகம் ஆடுகிறார். நாங்கள் வேலை முடிந்தால் வீட்டிற்கு செல்வோம். ஆனால், தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். அது என்ன மாதிரியான மாமியார் வீடு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
 
எம்.எல்.ஏக்களை அவர் சிறை வைத்திருக்கிறார். அவர்களை வெளியே விட்டால் எங்கள் அணியை தேடித்தான் அவர்கள்  வருவார்கள். அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்கிற சசிகலா குடும்பத்தினருக்கு அனைத்து கதவுகளும் முடப்பட்டு விட்டன” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments