Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Webdunia
வியாழன், 13 மே 2021 (08:30 IST)
வெளிநாட்டில் மருத்துவம் படித்து வேலையில்லாமல் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கொடுங்கள் என முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் 
 
அதன்படி வெளிநாடுகளில் மருத்துவம் படித்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை உடனடியாக மருத்துவர்களாக தமிழக அரசு வாய்ப்பு கொடுத்து இந்த கொரோனா காலத்தில் அவர்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்
 
இதுவரை 850 தமிழக மாணவர்கள் வெளிநாட்டு மருத்துவ வெளிநாட்டில் படித்து மருத்துவராக பணியாற்ற தமிழக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பதாகவும் அவர்களில் 250 பேர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் மீதி உள்ள 600 பேர்களுக்கும் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments