Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்கட்சியானாலும் நமது கடமையை ஆற்றுவோம்! – ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை!

Advertiesment
எதிர்கட்சியானாலும் நமது கடமையை ஆற்றுவோம்! – ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை!
, திங்கள், 3 மே 2021 (12:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் எதிர்கட்சியாக கடமையை செய்வோம் என ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 126 இடங்களில் பெருவாரியான வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து அதிமுகவினருக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்கட்சி என்னும் பொறுப்புடன் பணிகளை மேற்கொள்வோம். நிர்வாகம் என்னும் நாணயத்தின் ஒருபக்கம் ஆளும்கட்சி என்றால், மறுபக்கம் எதிர்கட்சி. ஆட்சி தேர் சரியாக செயல்படுவதை உறுதி செய்யும் கடமை நமக்கு உள்ளது” என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனுக்கு கட்சியில் இருந்து விலகிய கமீலா நாசர் டுவிட்!