இனி கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசுவார்: செல்லூர் ராஜூ

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:26 IST)
கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பேசுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்  
 
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கருத்துகளை ஊடகத்தில் தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மக்கள் பிரச்சனை, தொகுதி பிரச்சனைகளை மட்டுமே ஊடகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கூட்டணி குறித்தும் அரசியல் கருத்துகள் குறித்தும் பேசுவார் என்றும் தெரிவித்தார். 
 
அதிமுகவின் இந்த நிலைப்பாடுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments