ஜெ.வின் மரணம் ; தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (16:18 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரின் அண்ணன் மகன் தீபக்கிடம் விசாரணை கமிஷன் தலைவர் ஆறுமுகசாமி இன்று விசாரணை நடத்தினார்.


 
ஜெ.வின்  மரணம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதன் பின் நடவடிக்கையில் இறங்கிய ஆறுமுகசாமி ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, தீபக் உட்பட 60க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பினார்.
 
இதையடுத்து நேற்று விசாரணை ஆணையத்தின் முன்பு தீபா ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், இன்று தீபக் ஆஜரான. அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தீபக்கிற்கு சசிகலா தரப்பு அனுமதி வழங்கியது. எனவே, சிகிச்சைக்கான மனுவில் உறவினர் என்கிற முறையில் அவர் தான் சில ஆவணங்களில் கையெழுத்திட்டார் எனக்கூறப்படுகிறது. 
 
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் தொலைக்காட்சி ஒன்றுக்கு தீபக் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த போது ஆளுநர் அவரை கண்ணாடி அறைக்கு வெளியே நின்று பார்த்தார். அப்போது ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என கூறினார். அதோடு, அந்த நேரத்தில், தான் மருத்துவமனையில்தான் இருந்ததாகவும், அப்போது ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் இருந்ததாக கூறினார். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே சுயநினைவோடு இருந்ததாக தீபக் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், அவரின் இன்று ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments