Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூலிப்படை கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி கோரிக்கை

கூலிப்படை கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி கோரிக்கை

கூலிப்படை கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி கோரிக்கை
, சனி, 25 ஜூன் 2016 (18:01 IST)
தமிழகத்தில், கூலிப்படை கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டும் என பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு நிலை மனநிறைவளிப்பதாக இல்லை.
 
தலைநககர் சென்னையில் கடந்த 3 வாரங்களில் 4 வழக்கறிஞர்கள் படுகொலை, ஒரே நாளில் 6 பெண்கள் கொலை என குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
 
கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2000 படுகொலைகள் நடந்திருப்பதாக காவல்துறை கூறியுள்ள நிலையில் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
ஆனால், கொலை, கொள்ளைகள் அதிகரித்திருப்பதன் அபாயத்தை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் குறைந்து வருவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். 
 
அதேபோல், தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டகாசம் பெருகிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்தியாவின் எதிர்காலத் தூண்களை பாதுகாத்து, கூலிப்படைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டியது நமது முதன்மைக் கடமையாகும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில், பெண் ஊழியர் படுகொலை - நடிகை குஷ்பு கடும் கண்டனம்