கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையம்: 400 மீ நீளத்தில் உயர் மட்ட நடைபாதை..!

Siva
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (10:51 IST)
புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்திலிருந்து விரைவில் அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை 400 மீட்டருக்கு புதிய நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் என்ற பகுதியில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
குறிப்பாக கிளாம்பாக்கம் நிலையம் செல்ல, மின்சார ரயில் இல்லை மெட்ரோ ரயில் இல்லை போதுமான பஸ் போக்குவரத்தும்  இல்லை என்று கூறப்படுறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பகுதியில் விரைவில் ரயில் நிலையம் அமைய இருப்பதாகவும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கு உயர்மட்ட நடை பாதை அமைக்கப்பட இருப்பதாகவும் இதற்காக  நில எடுப்பு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
5900 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு ஆட்சியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  ஆனால் இனிமேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதன்பின் நடை மேம்பாலம் அமைக்க குறைந்தது ஒரு வருடம் ஆவது ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments