Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மின்சார பஸ்கள்: எந்தெந்த பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது??

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (10:36 IST)
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் மின்சார பேருந்துகள் எந்தெந்த பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகிறது என பார்க்கலாம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், முதல் முறையாக சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் குளிர்சாதன வசதியுடன், ஒரே நேரத்தில் 32 பேர் அமர்ந்துகொண்டும் 25 பேர் நின்றுகொண்டும் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

பேட்டரிகளால் இயங்கும் இந்த பேருந்துகளில் மின்சாரம் ரீசார்ஜ் செய்யப்படும். ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கமுடியும் என கூறப்படுகிறது. இந்த பேருந்துகளில் கட்டணமாக ரூ.11முதல் 25 வரை வசூலிக்கப்படுகிறது.

பேட்டரியில் மின்சாரம் குறைந்து வருவது டிரைவரின் கவனத்துக்கு “கண்ட்ரோல்” பேனல் மூலம் தெரிய வரும். இதில் ஜி.பி.எஸ் வசதியும் உள்ளது. இதில் தானியங்கி கதவு வசதி அமைக்கப்பட்டுள்ளதால், படிகட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குவது குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேருந்துகள் தற்போது சென்ட்ரலில் இருந்து திருவான்மியூருக்கு காலை, மாலை என நான்கு முறை இயக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments