Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி தலை நசுங்கி பலி.....

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (16:27 IST)
கரூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை பின் நோக்கி செலுத்தும் போது தவறுதலாக  பேருந்து சக்கரத்தின் அருகில் விழுந்த மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.

 
கரூர் பேருந்து நிலையம் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. ஏராளமான பேருந்துகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் தற்போது நால் ஒன்றிற்கு 700-முதல் 900-பேருந்துகள் வரை வந்து செல்கிறது.
 
இதனால் எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதியாகவே கரூர் பேருந்து நிலையம் காணப்படும். இந்நிலையில், கரூரில் இருந்து திருச்சி செல்லும் கும்பகோணம் கோட்ட அரசு பேருந்து பேருந்து நிலையத்தில் வரிசையில் நிறுத்துவதற்க்காக பேருந்தை பின் நோக்கி செலுத்தும் போது பக்கவாட்டில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத மூதாட்டி மீது மோதியது. 
 
இதில் நிலைகுலைந்த மூதாட்டி பேருந்தின் பின் சக்கரத்தின் அருகில் விழுந்ததால் பேருந்தின் பின் சக்கரம் மூதாட்டியின் தலை மீது ஏறி இறங்கியது. இவ்விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
இச்சம்பவம் அறிந்த போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பட்ட பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே மூதாட்டி பேருந்து சக்கரம் ஏறி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

-சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments