Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரோ?- திருநாவுக்கரசரை கிண்டல் செய்த இளங்கோவன்

Advertiesment
பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரோ?- திருநாவுக்கரசரை கிண்டல் செய்த இளங்கோவன்
, செவ்வாய், 10 ஜனவரி 2017 (15:27 IST)
திருநாவுக்கரசர் மட்டும் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரா என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.


 

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, அதிமுகவில் மட்டும் தான் நீடித்திருந்தால் தற்போது முதல்வராகவே ஆகியிருப்பேன் என்று கூறினார். இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஈரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 3 வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று இவர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு இவர்களது கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தான் அதிமுகவில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாஜகவில் அவர் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரா? என்று கிண்டல் செய்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு