Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி.. தொண்டர்கள் கொண்டாட்டம்!

Advertiesment
karur
, செவ்வாய், 12 ஜூலை 2022 (00:13 IST)
கரூர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அறிவித்ததற்கு  பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை அறிவித்ததற்கு தமிழக முழுவதும் அதிமுக தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
அதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் பேருந்து நிலையம் அருகில் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.
 
நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். 
 
மேலும் அதிமுக தொண்டர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவர் அம்மா, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வாழ்க என கோசங்கள் எழுப்பி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூதாட்டத்திற்காக போலி ஐபிஎல் தொடர்களை நடத்தியவர்கள் கைது! போலீஸார் அதிரடி