Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

9000 லிட்டர்லாம் இல்ல.. வெறும் 2 பக்கெட்தான் – புலம்பிய எடப்பாடி பழனிச்சாமி !

Advertiesment
edappadi
, சனி, 22 ஜூன் 2019 (09:10 IST)
தண்ணீர்ப்பஞ்சம் கடுமையாக நிலவும் நேரத்தில் முதல்வர் வீட்டுக்கு மட்டும் 2 லாரி தண்ணீர் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. முக்கியமாக சென்னையில் மக்கள் தண்ணீருக்காக இரவு பகல் என்று பாராமல், கைகளில் காலி குடங்களையும், கேன்களையும் வைத்து காத்திருக்கின்றனர். தண்ணீர் பஞ்சம் காரணமாக தமிழக கிராமங்களில் சுனைகளிலும், ஊற்றுகளிலும், மக்கள் வெயிலில் கால் கடுக்க சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு மட்டும் தினமும் 2 லாரி தண்ணீர் அனுப்பப்படுவதாக செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 9000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தக்குற்றச்சாட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். நேற்று தண்ணீர் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு சசெய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் அல்லாடும் போது உங்கள் வீட்டுக்கு மட்டும் தினமும் 2 லாரி தண்ணீர் அனுப்பபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ‘ எனது வீட்டில் ஆறு மாதமாக நான் மட்டும்தான் இருக்கிறேன். நான் 9000 லிட்டர் தண்ணீரை என்ன செய்யப் போகிறேன். ஒருநாளைக்கு இரண்டு பக்கெட் தண்ணீரில்தான் குளிப்பேன். நான்கு லிட்டர் தண்ணீர்தான் குடிப்பேன். முதல்வர் வீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரும் வருகிறார்கள். அவர்களுக்கு தண்ணீரோ அல்லது டீயோக் கூடக் கொடுக்கவில்லை எனில் என்ன நினைப்பார்கள். அதனால்தான் கொஞ்சம் தண்ணீர் கூடுதலாக செலவாகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் மகனுக்கு முக்கிய பதவி: கட்சிக்குள் சலசலப்பு!!