Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் அளவிற்கு மின்சாரத்துறைக்கு இழப்பு: நிதியமைச்சர் பிடிஆர் தகவல்

Advertiesment
நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் அளவிற்கு மின்சாரத்துறைக்கு இழப்பு: நிதியமைச்சர் பிடிஆர் தகவல்
, வியாழன், 8 ஜூலை 2021 (19:26 IST)
நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் அளவிற்கு மின்சாரத்துறைக்கு இழப்பு என நிதியமைச்சர் பிடிஆர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
2016ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் எழுதிய கடிதம் காரணமாக,தேனி மாவட்டத்தில் சோதனை முயற்சியாக ஆற்றின் கரைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட அன்று, வைகை அணைக்கு வந்துசேரும் நீரின் அளவு 160Cusecs ஆக ஒரே நாளில் அதிகரித்தது. ஆனால், அவர் மறைந்த பின்னர் நிலை மேலும் மோசமடைந்தது
 
527 இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக அதிக செயல்திறன் கொண்ட மோட்டார் மூலமாக இந்த தண்ணீர் திருட்டு நடக்கிறது. இதன் காரணமாக மக்களில் தொடங்கி வனவிலங்குகள் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பல்வேறு புகார்களை நான் தொடர்ந்து அளித்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
தண்ணீர் திருட்டு தொழிலாக மாறிய காரணத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நகரங்களில் வாழும் மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. தண்ணீர் திருட்டுக்கு துணையாக மின்சார திருட்டும் நடப்பதால் நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் அளவிற்கு மின்சாரத்துறைக்கு இழப்பு ஏற்படுகிறது.
 
இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் கட்சி பிரபலம் திமுகவின் இணைந்தார் !