Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி நீதிபதி உத்தரவு: 8 மணி நேரத்தில் தொலைந்த செல்போனை கண்டுபிடித்த சென்னை போலீஸ்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (07:44 IST)
சென்னை காவல்துறை அதிகாரி ஒருவருக்கு நேற்று ஒரு போன் கால் வந்தது. அதில் தான் ஒரு நீதிபதி என்றும், தன்னுடைய மனைவி கால்டாக்ஸி ஒன்றில் பயணம் செய்தபோது அவருடைய மொபைல்போன் தொலைந்துவிட்டதாகவும், அந்த மொபைல்போனில் பல முக்கிய தகவல்கள் இருப்பதால் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை செய்தனர். நீதிபதியின் மனைவி பயணம் செய்த கால்டாக்சியை  ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து அதன் டிரைவரை விசாரணை செய்தபோது தான் செல்போனை எடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து தொலைந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர்.

இனிமேல் தான் டிவிஸ்ட். இதன்பின்னர் நீதிபதி குறித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் நீதிபதியே இல்லை என்றும், மனைவியின் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க நீதிபதி போல் நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நபரை எச்சரிக்கை செய்த போலீசார் அவருடைய மனைவியின் செல்போனை ஒப்படைத்தனர். நீதிபதியின் மனைவி என்றதும் தனிப்படை அமைக்கும் போலீசார், சாதாரண குடிமகன் செல்போன் தொலைந்துவிட்டதாக புகார் கொடுத்தாலும் இதேபோல் விசாரணை செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments