Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை விவகாரம்! மருமகளை விஷம் வைத்து கொன்ற குடும்பம்! - ஊட்டியில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (10:50 IST)

ஊட்டியில் வரதட்சணை விவகாரத்தில் மருமகளை கணவன் குடும்பமே விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஊட்டியை சேர்ந்த இம்ரான் கான் என்பவருக்கு கடந்த 2021ம் ஆண்டில் ஆஷிகா பர்வீன் என்ற பெண்ணுடன் நிச்சயம் செய்து மணம் முடிக்கப்பட்டுள்ளது. திருமணமான அவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி ஆஷிகா பர்வீன் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

தங்களது மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக ஆஷிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் ஆஷிகாவின் கணவர் இம்ரான் கான் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதில் போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர்.

 

இதனால் அவர்களை தனித்தனியாக வைத்து விசாரித்ததில் ஆஷிகாவை திட்டமிட்டு கொன்றதை இம்ரான் கான் மற்றும் அவரது பெற்றோர் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆஷிகாவின் பெற்றோர் எதிர்பார்த்த வரதட்சணையை தராததால் தொடர்ந்து இதுகுறித்து அவர்கள் ஆஷிகாவிடம் கேட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக சில உரசல்களும் ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இதனால் ஆஷிகாவை கொல்ல அவரது கணவர் இம்ரான் கான் மற்றும் மாமியாரான யாஸ்மின் இருவரும் திட்டமிட்டு காபியில் சயனைடு கலந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து இதை கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீஸார் இம்ரான்கான், யாஸ்மின் இருவரையும் கைது செய்துள்ளனர். வரதட்சணைக்காக நடந்த இந்த கொலை சம்பவம் ஊட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments