Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்கலைக்கழக வேந்தர் பதவியின் மூலம் அரசியல் செய்வது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல - ம. நீ. ம டுவீட்

Advertiesment
பல்கலைக்கழக வேந்தர் பதவியின் மூலம் அரசியல் செய்வது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல - ம. நீ. ம  டுவீட்
, புதன், 26 அக்டோபர் 2022 (22:37 IST)
பல்கலைக்கழக வேந்தர் பதவியின் மூலம் அரசியல் செய்வது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என்று  மக்கள் நீதிமய்யம் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்று   நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் ஆகும்.  நாட்டில் நடக்கும் முக்கிய  விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழக வேந்தர் பதவியின் மூலம் அரசியல் செய்வது ஆளு நரின் பதவிக்கு அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில்,     ’’பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது’’என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி 40 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''பயங்கரவாதம் வேரறுக்கப்படவேண்டும்''- திருமாவளவன் ட்வீட்