Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால் முடிந்ததை செய்து விட்டேன், இதற்கு மேல் லண்டனுக்கு வாங்க: டாக்டர் ரிச்சர்ட் திட்டவட்டம்!

என்னால் முடிந்ததை செய்து விட்டேன், இதற்கு மேல் லண்டனுக்கு வாங்க: டாக்டர் ரிச்சர்ட் திட்டவட்டம்!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:49 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 47 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்து விட்டார் அவரது டிஸ்சார்ஜை அவரே முடிவு செய்வார் என பிரதாப் ரெட்டி பேட்டியளித்தார். இந்நிலையில் அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
ஆனால் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பழைய தெம்புடன் வருவாரா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. அவருக்கு எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு, எழுதுவதற்கு என பயிற்சிகள் அளிக்கப்படுவதாக செய்திகள் வருவது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்னதாக சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலெ அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க கூறியுள்ளார். ஆனால் சசிகலா தரப்பு போயஸ் கார்டனில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தன்னால் முடிந்த வரை சிகிச்சை அளித்து விட்டதாகவும், இதற்கு மேல் அவரது உடல் நிலையை வலுப்படுத்த வேண்டுமானால் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அழைத்து செல்ல வேண்டும். அங்கு மேலும் பல வசதிகள் உள்ளன அதன் மூலம் முதல்வருக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடியும் என டாக்டர் ரிச்சார்ட் ஜான் பீலே கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானா சுரங்கத்திற்குள் சிக்கிய 8 பேர் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்

100 சவரன் நகைகள் கொள்ளை.. பெண்களுடன் உல்லாச வாழ்க்கை! - அதிர்ச்சியளிக்கும் ஞானசேகரன் வாக்குமூலம்!

வந்தே பாரத் ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் எடுத்தால் அபராதம்.. பயணிகள் அதிருப்தி..!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments