Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் ஐடி திட்டம் தேவையா?- நடிகர் விஜயகாந்த் கேள்வி

Advertiesment
மக்கள் ஐடி திட்டம் தேவையா?- நடிகர்   விஜயகாந்த் கேள்வி
, ஞாயிறு, 8 ஜனவரி 2023 (12:06 IST)
மக்கள் ஐடி திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை முகமை சமீபத்தில் ‘’  மாநிலத்தில்  மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த, தமிழ்நாடு அரசு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் ஒரு தனித்துவம் மிக்க அடையாள எண்ணை உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான திறன் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.

இதற்கு,   நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மக்கள் ஐடி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 
‘’தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் ஐடி என்ற தனித்துவ வழங்கப்போவதாக அடையாள எண்ணை அறிவித்துள்ளன. இந்த திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐடி திட்டம் எதற்கு என்ற கேள்விஅனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா?.
 

ALSO READ: தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும் -விஜயகாந்த்
 
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக
அரசு செயல்படுத்த வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை கடத்தல்: குழந்தையின் தாயை கைது செய்த போலீஸார்