Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் - தமிழ்நாடு இருக்குமா.? ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி..!!

Seeman

Senthil Velan

, புதன், 18 செப்டம்பர் 2024 (14:29 IST)
திமுக 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும், தமிழ்நாடு இருக்குமா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு இன்னும் நூறாண்டுகள் திமுகவின் தேவை உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு இருக்குமா? என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
 
மாநில சுய ஆட்சி என்று வெற்று வார்த்தையை தவிர வேறு எதையும் வைக்கவில்லை என்றும் வசனத்தையும் திரைக்கதையையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் மாலை போட்டதை வரவேற்கிறேன் என குறிப்பிட்ட சீமான்,  அதேபோல் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திருவிக உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
மேலும் விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு என்றும் அவர் தெரிவித்தார். உதயநிதி துணை முதலமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறார்? என்று சீமான் விமர்சித்தார்.  அவருக்கு பசி என்றால் என்ன என்று தெரியுமா? என்றும்  ஒரே உடையை ஒரு வாரம் உடுத்தி பள்ளிக்கு சென்று இருப்பாரா? என்றும் உணவு கிடைக்காமல் பழைய சோறு உண்டு இருப்பாரா? என்றும் அவர் தெரிவித்தார். உதயநிதி நடத்திய கார் பந்தயத்தில் உள்ளூர் நபர்கள் யாரேனும் பங்கேற்று வெற்றி பெற்றார்களா? என்று சீமான் கூறினார்.

 
விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆர்எஸ் பாரதியையும், டிகேஎஸ் இளங்கோவனையும் அனுப்புவதற்கு பதிலாக டிஆர் பாலுவையும், ஜெகனையும் தான் அனுப்ப வேண்டும் என்று சீமான் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்.! இலங்கை நீதிமன்றம் முன் மீனவர்கள் தர்ணா.!!