Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது: கனிமொழி அதிர்ச்சி தகவல்..!

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது: கனிமொழி அதிர்ச்சி தகவல்..!

Mahendran

, திங்கள், 26 பிப்ரவரி 2024 (10:00 IST)
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக திமுக எம்பி கனிமொழி கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகுதி வாய்ந்த மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கி கணக்கிற்கு இந்த பணம் அனுப்பப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள மகளிர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வரும் நிலையில் மீண்டும் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கனிமொழி கூறியுள்ளார்.

மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். அவர் பேசியபோது ’மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும்’ என்று தெரிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 என்பது முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எப்படி நிறுத்தப்படும் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊராட்சிக்கு செலவு செய்யும் தொகையில் 5 சதவீதம் கூட திரும்ப வருவதில்லை! - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!