Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக அரசின் 3 ஆண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

Advertiesment
edapadi

Senthil Velan

, புதன், 8 மே 2024 (12:19 IST)
விடியா திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை என்றும் இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த விடியா திமுக ஆட்சி தொடர்ந்து தமிழகம் படுபாதாளத்திற்கு சென்றுவிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள் என்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளுங்கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது  என்று வேதனை தெரிவித்துள்ளார்.
 
திமுக ஆட்சிக்கு வந்த உடன், மின்கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பால் விலை ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளன என்றும் அரிசி, காய்கறி, வீட்டு உபயோக எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்கள், மணல், ஜல்லி, சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் சட்டத்தின் மாட்சிமை உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றும் கொலை, கொள்ளை வழிப்பறி என அதிகரித்து வரும் குற்றச் செயல்களால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் எடப்பாடி புகார் தெரிவித்துள்ளார்.
 
ஆளுங்கட்சி நிர்வாகிகளால், போலீசார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் ஜாதி, இன துவேசங்கள் அதிகரிக்கின்றன என்றும் மின்வெட்டால், மக்கள் அல்லலுறுகின்றனர் என்றும் 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களை கடனாளியாக ஆக்கியது தான் விடியா திமுக அரசின் சாதனை என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.


36 மாதங்களாக எந்த புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. இது தான் திமுக அரசின் 3 ஆண்டுகால சோதனைகள் என்று கடுமையாக சாடியுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த விடியா திமுக ஆட்சி தொடர்ந்து தமிழகம் படுபாதாளத்திற்கு சென்றுவிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு..! துப்பு துலக்க முடியாமல் திணறும் போலீசார்.!