Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணி மகத்தான வெற்றி - ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:34 IST)
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91975 பணிகளை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.19 % வாக்குகள் பதிவானது. அதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் 77.73 வாக்குகள் பதிவானது.  
தற்போதைய நிலவரப்படி மாவட்டம் கவுன்சிலருக்கான மொத்தமுள்ள 515 இடங்களில் அதிமுக  242  இடங்களிலும், திமுக 270இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் மொத்தமுள்ள 5067 இடங்களில் அதிமுக 2186 இடங்களிலும்,  திமுக 2336இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில், திமுக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்  திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

அதிமுகவின் அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச அணுகுமுறை, எதிர்மறைக் கூறுகளை மீறி மகத்தான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
 
அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டும், பணத்தை வாரியிறைத்தும்  அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.
 
ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
 
வழக்கமாக உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற நிலையில்,தற்போது எதிர்க்கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments