Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதி தொண்டர்களை சந்திக்கும் நிலையில் உள்ளாரா?: அதிர்ச்சி தகவல்!

கருணாநிதி தொண்டர்களை சந்திக்கும் நிலையில் உள்ளாரா?: அதிர்ச்சி தகவல்!

Advertiesment
கருணாநிதி தொண்டர்களை சந்திக்கும் நிலையில் உள்ளாரா?: அதிர்ச்சி தகவல்!
, செவ்வாய், 9 மே 2017 (15:20 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வரும் ஜூன் 3-ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் தொண்டர்களை சந்திக்க உள்ள கருணாநிதி, வைர விழாவிலும் கலந்துகொள்கிறார் என திமுக அமைப்பு செயலாளரும் எம்பியுமான எஸ்.ஆர்.பாரதி நேற்று கூறினார்.


 
 
ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள் அனுமதித்தால் தலைவர் அனைவரையும் சந்திப்பார் என சூட்சகமாக சிலவற்றை கூறிவிட்டு சென்றார். அப்பொழுதே தெரிந்துவிட்டது கருணாநிதியின் உடல்நிலை தொண்டர்களை சந்திக்கும் நிலமையில் இல்லை என்று.
 
திமுக தலைவர் கருணாநிதி தற்போது இயல்பாக சுவாசித்தாலும் அடிக்கடி சளி கட்டிக்கொள்வதால், செயற்கை சுவாசம் செலுத்த பொருத்தப்பட்ட டிராக்கியோஸ்டமி கருவி இன்னமும் அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கருணாநிதியால் இன்னமும் பேச முடியவில்லை என்றே தகவல்கள் வருகின்றன.
 
ஆனால் அவரால் நெருக்கமானவர்களை அடையாளம் காண்டுகொள்ள முடிகிறது. நெருக்கமானவர்கள் வந்து கருணாநிதிக்கு அருகே நின்றால் அவர்களைப் பார்த்து கண் கலங்குகிறாராம். அவரின் உதவியாளர் நித்யாவும், மகள் செல்வியும் தான் அவரை அருகில் இருந்து கவனிக்கிறார்களாம்.
 
செல்வியின் வீட்டில் இருந்து கருணாநிதிக்கு வரும் நீர் உணவுகள் அவருக்கு இரைப்பையில் நேரடியாக செல்லும் வகையில் வயிற்றில் துளையிடப்பட்டு குழாய் பொருத்தப்பட்டுள்ளதாம். அதன் வழியாக தான் உணவுகள் செலுத்தப்படுகிறதாம். அவர் வாய் வழியாக உணவு எதுவும் எடுத்துக்கொள்வதில்லையாம்.
 
தற்போது தான் கருணாநிதி இன்ஃபெக்‌ஷன் பிரச்சனை இல்லாமல் இருப்பதாகவும், இந்நிலையில் அவர் அனைவரையும் சந்திப்பதால் அது அவரது உடல்நிலையை மீண்டும் பாதித்து விடும் என மருத்துவர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால் கருணாநிதியை யாரும் சந்திக்க வேண்டாம் என மருத்துவர் உறுதியாக கூறிவிட்டாராம்.
 
இதனால் ஸ்டாலின் உடனடியாக அந்த பேட்டியை அளித்ததாக கூறப்படுகிறது. கருணாநிதியின் பிறந்தநாள் நெருங்கி வரும் போது மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை அதனால் தலைவர் தொண்டர்களை சந்திக்க மாட்டார் என திமுக சார்பில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாகிய கடற்கரை!!