Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் யார்? திமுகவின் அடுத்த நகர்வு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:00 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற திமுக தலைமை பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. 

 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி இருப்பது வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
திமுகவின் அமோக வெற்றியை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதயநிதி, ஆ ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 
 
இந்நிலையில் வெற்றி களிப்பில் திமுகவினர் இருக்கும் நிலையில் 21 மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. 134 நகராட்சி தலைவர், துணை தலைவர், 435 பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
 
இப்பணிகள் முடிந்ததும் தலைமை பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி செய்து அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments