நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மனைவில் தோல்வி அடைந்த வேதனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
சாத்தூர் நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் சுகுணாதேவி. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 215 வாக்குகளே பெற்று சுகுணாதேவி தோல்வி அடைந்தார். தன் மனைவில் தோற்று போனதால் வேதனையில் இருந்த கணவர் நாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.