Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரத்தை முதல்முறையாகக் கைது செய்ய திமுக ! – ஒரு சின்ன பிளாஷ்பேக்

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (09:19 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் தனது அரசியல் பொதுவாழ்வில் இரண்டாவது முறையாக நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முதல் முறையாக எப்போது கைது செய்யப்பட்டார் தெரியுமா ?

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். 9 முறை இந்தியாவின் பட்ஜெட் தாக்கல் செய்தவரும், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியப் பதவிகளை வகித்தவருமான சிதம்பரம் கைது இந்திய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

ப சிதம்பரம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் நிலையில் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக கடந்த 1989 ஆம் ஆண்டு சென்னை மறைமலை நகரில் நடந்த போராட்டத்தின் போது திமுக அரசால் கைது செய்யப்பட்டார். சென்னை மறைமலை நகர் ரயில்வே நிலையத்துக்குக் காங்கிரஸ் தலைவர் காமராசர் பெயரை வைக்க நடந்த போராட்டத்தில் சிதம்பரமும் கலந்துகொண்டார். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் திமுக அரசு கைதுசெய்து 15 மணிநேரம் கழித்து விடுதலை செய்தது.

அதன் பின் 30 ஆண்டுகள் கழித்து இப்போது இரண்டாவது முறையாக ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments