Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேராசிரியர் க அன்பழகன் மறைவு – திமுக 7 நாட்கள் துக்கம் !

பேராசிரியர் க அன்பழகன் மறைவு – திமுக 7 நாட்கள் துக்கம் !
, சனி, 7 மார்ச் 2020 (08:26 IST)
பேராசிரியர் க அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மு க ஸ்டாலின்

திமுகவின் பொதுச்செயலாளர் க அன்பழகன் மறைந்துள்ளதை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரித்து கட்சிப் பணிகளைத் தள்ளி வைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு அவர் மறைந்தார்.

தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்  வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பேராசிரியரின் மறைவை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற தோழராகவும் 43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளராகவும் கழக ஆட்சியில் சமூக நலம் மக்கள் நல்வாழ்வு கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர், சில நாட்கள் உடல் நலிவுற்று இருந்து இன்று 7- 3 -2020 அதிகாலை ஒரு மணியளவில் மறைவெய்தியதை ஒட்டி, கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட்டு கழகக் கொடிகளை ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகரும் நண்பரும்…கைது செய்த போலிஸார் !