Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (09:59 IST)
திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது என்றும் இரு கட்சிகளும் ஒட்டவே ஒட்டாது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் வளைத்து போடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இரு கூட்டணியிலும் பேரம் பேசி வரும் தேமுதிக, தற்போது அதிமுக கூட்டணியை நெருங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் செய்திகளிடம் கூறியபோது, 'அதிமுக அமைத்துள்ளது ராஜ்ய கூட்டணி என்றும், திமுக அமைத்துள்ள கூட்டணி ஜீரோ கூட்டணி என்றும் ஜீரோவோடு எது சேர்ந்தாலும் ஜீரோதான் என்றும் கூறியுள்ளார். 
 
மேலும் பாஜகவிற்கு 5 சீட் கொடுத்த அதிமுக அடிமையா? அல்லது காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் கொடுத்த திமுக அடிமையா? என மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்களைப் பார்த்து பொதுமக்கள் அவரை கிண்டல் செய்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்: தேதி அறிவிப்பு..!

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விஜய்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments