எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் லைட் எரிகிறதா? திமுக, அதிமுக திடீர் போராட்டம்..!

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:32 IST)
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் லைட் எரிகிறது என்று திடீரென திமுக மற்றும் அதிமுக முகவர்கள் போராட்டம் நடத்தியதால் வியாசர்பாடி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி அருகே எம்கேபி நகர் என்ற பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 150ஆவது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிகிறது என திடீர் என புகார் எழுந்தது.

இந்த புகாரை அடுத்து அங்கிருந்து அதிமுக மற்றும் திமுக முகவர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

வாக்களித்த சிலர் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில்  லைட் எரிவதாக வந்து சொன்னதால்தான் நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துகிறோம் என்று திமுக அதிமுக முகவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனா தேர்தல் அதிகாரிகள் இது குறித்து விளக்கம் அளித்து அப்படி எல்லாம் லைட் எரியாது என்றும், எந்த சின்னத்துக்கு வாக்களிக்கிறோமோ அந்த சின்னத்தில் தான் லைட் எரியும் என்று கூறிய அவர்களை சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க!.. தவெக இனிமே வேறலெவல்!.. செங்கோட்டையன் மாஸ்!...

காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments