Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த தடவை யார் கூடயும் கூட்டணி இல்லை - கெத்து காட்டும் விஜயகாந்த்

Advertiesment
இந்த தடவை யார் கூடயும் கூட்டணி இல்லை - கெத்து காட்டும் விஜயகாந்த்
, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (14:08 IST)
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
 
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டனர். நேற்றைய அதிமுக செயற்குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல் தான் திமுகவும் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
webdunia
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டிட்டு அனைத்து தொகுதியிலும் வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரலான பாட்டி - பேத்தி புகைப்படம்: உண்மை பின்னணி என்ன?