Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஸ்ட் எடுங்க.. தேமுதிக நிர்வாகிகளுக்கு அவசர உத்தரவு! – தனித்து போட்டியிட திட்டம்?

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:35 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள தேமுதிக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியலை உடனடியாக தயாரிக்க தேமுதிக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பிரேமலதா தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments