Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை வீழ்த்துவோம்.. வீதிகளில் தேமுதிகவினர் கூச்சல்! – எல்.கே.சுதீஷ் காட்டம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (13:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள தேமுதிக, அதிமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பேசியுள்ள தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் “அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்த நாள்தான் தேமுதிகவுக்கு தீபாவளி. அதிமுகவின் கே.பி.முனுசாமி பாமகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு ஸ்லீப்பர் செல்லாகவும் செயல்படுகிறார். எதிர்வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் டெப்பாசிட் இழக்கும்” என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

தேமுதிகவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தேமுதிகவினர் சாலைகளில் அதிமுகவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments