Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல்!

Mahendran
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (10:05 IST)
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தேமுதிக, பாஜகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது திடீரென அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சு வார்த்தையை கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அந்த கட்சிக்கு மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி ஒதுக்கப்படும் என்று பேசி முடிவு செய்த பட்டிருப்பதாகவும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி குறித்த ஒப்பந்தத்தின் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments