தேமுதிக தொண்டர்களை விட, குறைந்த வாக்குகள் பெற்றது பற்றி விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 10 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் தேமுதிக தொண்டர்களின் எண்ணிக்கையோ 25 லட்சம் பேர். அவர்கள் அனைவரும் ஓட்டு போட்டிருந்தால், தொண்டர்களின் எண்ணிக்கை அளவுக்கு, தேமுதிக வாக்குகளை பெற்றிருக்கும்.
எனவே இதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். தவறான கூட்டணி அமைத்ததால் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் அவர்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருக்கலாம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து கட்சி பணியில் தீவிர ஆர்வம் காட்டுமாறு, விஜயகாந்த் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், மிஸ்டு கால் மூலம் தங்களுக்கு 50 லட்சம் தொண்டர்கள் சேர்ந்துள்ளதாக கூறிக்கொண்ட பாஜக, தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதமோ வெறும் 2.7 மட்டுமே.
எனவே மிஸ்டுகாலை நமக்கு கொடுத்து விட்டு, ஓட்டை திராவிட கட்சிகளுக்கு மக்கள் போட்டுவிட்டார்களா என்று குழப்பத்தில் இருக்கிறதாம் பாஜக தரப்பு.