Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு.. பிரேமலதா அதிர்ச்சி..!

Mahendran
சனி, 17 பிப்ரவரி 2024 (13:03 IST)
பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்றும் இரு தரப்பிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக கூறியுள்ளதால் எந்த கூட்டணியில் சேர்வது என்ற குழப்பத்தில் பிரேமலதா இருப்பதாக தெரிகிறது.

பாஜக கூட்டணியில் இணைந்தால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ராஜ்யசபா தொகுதி எம்பி மூலம் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் பிரேமலதாவிற்கு பாஜக கூட்டணியில் சேரவே விருப்பம் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆனால் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று திடீரென எதிர்ப்புகளை தெரிவித்துள்ளதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments