Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

Siva
வியாழன், 31 அக்டோபர் 2024 (13:50 IST)
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை பட்டாசு வெடிப்பால் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தீபாவளி திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருவதோடு, இனிப்புகளையும் உறவினர்களுக்கு பறிமாறி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தீபாவளிக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளில் 90% விற்பனை ஆகிவிட்டதாக சிவகாசி பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 21 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியபோது, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காயத்திற்கு என சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தஞ்சை, மதுரை மற்றும் திருச்சியில் தீக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சிலருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் போது எந்த உயிர்ச் சேதமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என அவர் கூறினார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

ஒரு கோடி உறுப்பினர்கள்.. இந்தியாவின் 5வது பெரிய கட்சியானது தவெக..!

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments