Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி... மாணவர்கள் ஆர்வம்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:58 IST)
கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.    இதில்  சுமார்
200 - க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ  மாணவிகள்  பங்கேற்றனர். 


கரூர்  காந்திகிராமம்  தனியார்  பள்ளியில்  மாவட்ட  அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்திலிருந்து 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த சிலம்பாட்ட போட்டிகள் இரண்டு வகையாகவும், அதில் தனித்திறன் போட்டி மற்றொன்று தொடு முறை ஆகியவாறு போட்டிகள்  நடைபெற்றது.

இதில்  வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும்., இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளும்,  முதலிடம் பிடிக்கும் வீரர்களும் திருநெல்வேலியில் மாநில அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தலைவர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான மலையப்பசாமி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.  கரூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி கவலைக்கிடம்: மாரடைப்பு அபாயம் என தகவல்..!

ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுமுறை அளித்த அரசு பள்ளி.. வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்..!

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments