Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் கள்ளத்தொடர்பு... சொத்தை பறிக்க மிரட்டல்.. தொழிலாளி கதறல்...

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:51 IST)
மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர் தனது சொத்துக்களை எழுதி கொடுக்க கொலை மிரட்டல் விடுத்ததால், பாதிக்கப்பட்ட டெக்ஸ் தொழிலாளி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாந்தோணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் வயது 54.தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி கவிதா வயது 40. பதினெட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணத்தின்போது தனது சொத்துக்களில் பாதி தனது மனைவியின் பெயரில் எழுதி வைத்திருந்தார். மனைவி கவிதா இதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவருகிறார். இந்நிலையில் சிவசங்கரன் மீதி உள்ள சொத்துக்களையும் மனைவி பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, தாந்தோணி காவல்நிலையம் போன்றவற்றில் புகார் அளித்திருந்தார் .இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ,இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சிவசுப்ரமணியம் மறைத்து எடுத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார் .

காவல் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அவரை தடுத்து ,இது தொடர்பாக விசாரணை நடத்த தாந்தோணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணு ஆயுத மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்! - ஐ.நாவில் வைத்து இந்தியா விடுத்த எச்சரிக்கை!

முதலமைச்சர் வீட்டை சுற்றி 110 ஏஐ கேமராக்கள்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நான் சனிக்கிழமை மட்டும் வருபவன் அல்ல.. விஜய்யை தாக்கிய உதயநிதி ஸ்டாலின்..!

பிரிந்து வாழும் மனைவிக்கு கணவரின் ஓய்வூதியத்தில் உரிமை உண்டா? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

மீண்டும் 85 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments