Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலணி கழட்டிய சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:49 IST)
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நேற்று கோவில் ஒன்றுக்குச் சென்றபோது அங்கு செருப்பை கட்டுவதற்காக 14 வயது சிறுவர் ஒருவரை அழைத்து செருப்பை கழற்ற சொன்னார். இது குறித்த வீடியோ மற்றும் செய்திகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் அமைச்சர் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் இது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஊடகங்களால் பெரிதாக்கப்பட்ட இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்க விரும்பாமல் சம்பந்தப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் ஊட்டி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார் என்றும், இன்று சிறுவனின் குடும்பத்தார் விருந்தினர் மாளிகைக்கு அழைக்கப்பட்டதாகவும் அவர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது
 
முன்னதாக சிறுவனின் தாயார், சிறுவனை அமைச்சர் நடத்திய விதம் குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று நடைபெறும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சிறுவனின் குடும்பத்தினர் சமாதானம் அடைவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments