Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் போலீஸ் கஸ்டடியில்; விஸ்வரூபம் எடுக்கும் மனைவி அனுராதா?

தினகரன் போலீஸ் கஸ்டடியில்; விஸ்வரூபம் எடுக்கும் மனைவி அனுராதா?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (12:49 IST)
அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியை சேர்ந்தவர்கள் அறிவித்தார்கள். ஆனால் எந்தவித ராஜினாமா கடிதமும் கொடுக்காமல் தினகரனும் தான் ஒதுங்கி கொள்வதாக கூறினார்.


 
 
இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் டெல்லி போலிசால் கைது செய்யப்பட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். இதனால் அவரால் அதிமுகவில் தனக்கு உள்ள எதிர்ப்பை சமாளிக்கவும், அதனை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லாமல் உள்ளது.
 
இந்நிலையில் தினகரனின் மனைவி அனுராதா தினகரன் தற்போது தனது கணவரின் இமேஜை உயர்த்தி பிடிக்க களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அனுராதா ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனராக ஒரு காலத்தில் இருந்தவர். இந்நிலையில் மீண்டும் அவர் தனது கணவருக்காக ஜெய டிவி விவகாரங்களில் தலையிடுவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
ஜெயா டிவிக்கு போவதும் வருவதுமாக இருந்த அனுராதா தினகரனுக்கு சிக்கல் வந்த பிறகு வீட்டிலிருந்தபடியே ஜெயா டிவிக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
 
தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்களிடம் இருந்து அறிவிப்பு வந்த பின்னர் கொந்தளித்த அனுராதா ஜெயா டிவிக்கு போன் செய்து சில இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
ஆட்சியும் கட்சியும் நல்லா இருக்கணும்னா சின்னம்மா பொதுச்செயலாளராகவும், தினகரன் துணைப் பொதுச்செயலாளராக இருக்கணும்னு கட்சி நிர்வாகிகளிடம் பேட்டி எடுத்து அந்த பேட்டியை திரும்பத் திரும்ப ஒளிபரப்ப அனுராதா கூறியதாக பேசப்படுகிறது.
 
ஆனால், முக்கிய நிர்வாகிகள் அப்படி பேட்டி கொடுக்க மறுத்ததால் சும்மா பேருக்கு ஆட்களை பிடித்து பேட்டி எடுத்து அந்த பேட்டிகளை அனுராதா பார்வைக்கு அனுப்பிய பின்னர் ஒளிபரப்பி வருவதாக கூறப்படுகிறது. தினகரன் சிறைக்கு சென்ற பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ள அவரது மனைவி அனுராதாவிடம் இருந்து வரும் உத்தரவுகளை பின்பற்றலாம என தொலைக்காட்சி ஊழியர்கள் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

சமூகநீதி வேடம் கலைகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காதது ஏன்? விஜய் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments