தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை? புகைப்படங்கள்தான் ஆதாரம் - கொறடா ராஜேந்திரன்

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (15:17 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொறடா  ராஜேந்திரன் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது 4 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 
அதிமுக எதிராக செயல்படும் 4 எம்.எல்.ஏக்களான கள்ளக்குறிச்சி - பிரபு, விருத்தாச்சலம் - கலைச்செல்வன், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, நாகை -தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு சபநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்புவார் என்று தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கொறடா ரஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;
 
’அதிமுக எம்.எல்.ஏக்களாக உள்ள கலைச்செல்வன், ரத்தினசபாபதி, மற்றும் பிரபு ஆகியோர் மக்களவை தேர்தலில் தினகரனின்  அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 
 
தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நால்வர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 3 பேர் மீது  மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரவைத் தலைவர்  சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.
 
மேலும் இவர்கள் மீது தகுதிநீக்கம் நடவடிக்கை செய்யப்படுமா என்றுசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த ராஜேந்திரன், நான் அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். தகுதி நீக்க நடவடிக்கை என்பதை பேரவை தலைவர்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
 
மேலும் இந்த நால்வருக்கும் நோடீஸ் அனுப்பபட்ட பிறகு 15 நாட்களுக்குள் சரியான விளக்கம் அளிக்கவில்லை எனில் இதைக்காரணம் காட்டி  அவர்கள் நால்வரையும் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments